டிசம்பர் 25ஆம் தேதி அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த சதித் திட்டம்

Tuesday, February 16, 2010

"சிலம்பாட்டம்' படத்துக்குப் பின் ஏன் இவ்வளவு இடைவெளி?

தமிழில் முதன் முதலாக நடித்த "சிலம்பாட்டம்' நல்ல ரீச் கொடுத்தது. கதைக்கு ஏற்றவாறு என் நடிப்பு பொருந்தி போனது. நடன அசைவுகளும் பேசப்பட்டது. சிம்புவுடன் முதல் படத்தில் நடித்ததில் சந்தோஷம். அதன் பின் தெலுங்கில் ஒரு படம் முடித்தேன். அதனால்தான் தமிழில் சின்ன இடைவெளி விழுந்து விட்டது. இனி தமிழில் இடைவெளி இல்லாமல் நடிக்க முடிவு எடுத்திருக்கிறேன்



.

இடைவெளிக்கு நடன நிகழ்ச்சிகளும் காரணமா?

நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என் பொழுதுபோக்கு. அதை இன்றும் செய்து வருகிறேன். நடன நிகழ்ச்சிகளில் கலந்து நடனமாடுவதை பெரிதும் விரும்புகிறேன். சினிமாவையும், நடனத்தையும் என்றைக்குமே தொடர்புபடுத்தவில்லை. இரண்டுமே வேறு விஷயங்கள். தெலுங்கில் இருந்த படம்தான் இடைவெளிக்குக் காரணம்; நடன நிகழ்ச்சிகள் அல்ல.

இரண்டு, மூன்று படங்களில் நடிப்பது சிரமம்தானே?

யார் இங்கு இரண்டு, மூன்று படங்களில் நடிக்காமல் இருக்கிறார்கள்? வாய்ப்புகள் தரமானதாக இருந்தால் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஹீரோயினாகத்தானே நடிக்கிறேன். உடல் எடையைக் கூட்டி, இறக்கி நடிக்கவில்லையே... அதனால் சிரமம் இருக்காது.

தெலுங்குப் பட வாய்ப்புகள்...?

தெலுங்கிலும் வாய்ப்புகள் வருகின்றன. தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் இருக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதால், வேறு வாய்ப்புகளைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது நடித்து வரும் படங்கள் முடிந்த பின்னரே அடுத்த வாய்ப்புகளைப் பற்றி பேசலாம்.

தற்போதைய படங்கள் பற்றி?

"தம்பிக்கு இந்த ஊரு' விரைவில் ரிலீசாகிறது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு கிளாமர் இருக்கும். அதே நேரத்தில் நடிப்பும் இருக்கும். "சாந்துப் பொட்டு' படத்தில் சிபிராஜ்தான் ஹீரோ. என்னை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. சாந்தனுவுடன் நடித்து வரும் "ஆயிரம் விளக்கு' படத்தின் படப்பிடிப்பு பாதியளவு முடிந்துள்ளது. தாதா ஒருவனின் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட கதை இது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl