
தனது நிதி தேவைகளை சமாளிக்க கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட லண்டனிலுள்ள பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி வசதிகளை பெருக்குவது உள்ளிட்ட இரண்டு பெரிய திட்டங்களை நிறைவேற்ற சுமார் 400 மில்லியன் பவுண்ட்ஸ் தேவைப்படுகிறது.
இதற்கான நிதியை திரட்டவேஇ சந்தையில் கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் நிதி இயக்குனர் ஆன்ட்ரூ ரியட் தெரிவித்ததாக லண்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.