டிசம்பர் 25ஆம் தேதி அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த சதித் திட்டம்

Tuesday, January 5, 2010

சூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள்



சூரியமண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. டெலஸ்கோப் டெல்டா - 2 என்ற டெலஸ்கோப், ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் மிகப்பெரிய காமிரா பொருத்தப்பட்டு உள்ளது.


இந்த டெலஸ்கோப் தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்த டெலஸ்கோப் 5 கிரகங்களை கண்டுபிடித்து உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.இந்த 5 புதிய கிரகங்களும் நெப்டினை விட பெரியவை.


இந்த கிரகங்களுக்கு 4 பி, 5 பி, 6 பி, 7 பி, 8 பி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த 5 கிரகங்களும் பூமியை விட 4 மடங்கு பெரியவை ஆகும். இவை சூரியனுக்கு நெருக்கமாக உள்ளன.அவை 3.2 நாட்கள் முதல் 4.9 நாட்களுக்கு ஒருமுறை தம்மைத்தாமே சுற்றி வருகின்றன.


சூரியனை விட இந்த 5 கிரகங்களும் அதிக வெப்பம் மிகுந்தவை என்றும், மிகுந்த பிரகாசமான இந்த கிரகங்களில் 1200 முதல் 1650 சென்டி கிரேடு வரை வெப்பம் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl